PAALAM.LK

 

சமூக பொருளாதார செயற்பாடுகள் ஆக்க பூர்வமானதாகவும் வினைத்திறனுடையதாகவும் மாற்றமடையும் போதுதான் அடுத்த சந்ததியினரின் நல்வாழ்வுக்கு ஏதுவான சூழல் உருவாகும். குறிப்பாக “பா” எனும் பகுதி சமகால ஆலோசனைகளாகவும் மக்கள், இடம், நிகழ்வுகள் போன்ற பகுதிகள் தொழிலாளர், நிலம், மூலதனம், முயற்சியாண்மை என்ற வகைப்படுத்தலின் அடிப்படையில் பல்லூடக ஆக்கங்களின் ஊடாக மக்களை இணைப்பதே பாலத்தின் நோக்கமாகும். இம்முயற்சியானது இளைஞர்களின் பங்களிப்பினூடாக முன்னெடுக்கப்படுகிறது. இது தொடர்பான உங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள paalampaa@gmail.com (E.mail ) என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளவும்.


பா

சமூக ஆலோசனைகள், புத்தாக்கச் செயற்பாடுகள் மேற்கொள்ளத் தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தல் பற்றி “பா” பகுதியில் எடுத்துரைக்கப்படும்.


மக்கள்

மக்களின் அறிமுகம், தொழிற் தகமையாளர்களின் சுவாரஸ்ய பயணம், சமூகத்தில் மனித வளத்தின் பங்களிப்பு மற்றும் கடமைகள், அடுத்த சந்ததியினருக்கான வழிகாட்டல்கள், போன்ற மக்களை ஆதாரமாகக் கொண்ட பொருளியல் சிந்தனைகள் இங்கு எடுத்துரைக்கப்படும்.


 இடங்கள்

இயற்கையில் அமைந்த இடங்கள், மனித முயற்சியினால் உண்டாக்கப்பட்ட இடங்கள் என்பவற்றின் வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சிறப்பு, அமைவிடம் பொருளாதாரத்தில் தாக்கம் செலுத்தும் விதம் போன்ற பண்புகள் இப் பகுதியில் எடுத்துரைக்கப்படும்.


நிகழ்வுகள்

மனிதனால் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து துறை சார்ந்த நிகழ்ச்சிகளின் சாராம்சமும் இங்கு எடுத்துரைக்கப்படும். கடந்த காலம், சமகாலம், எதிர்காலம் என்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக அமையும்.


தூர நோக்கு

சிறு புள்ளியாய் யாழ்ப்பாணத்தின் சமூக பொருளாதாரம் சார்ந்து ஆரம்பித்து படிப்படியாக இலங்கை எனும் பெருவிருட்சம் நோக்கிய பயணம்.


பணிக்கூற்று

இளைய சமுதாயத்தினரின் பங்களிப்புடன், சிறந்த, திடமான எண்ணங்களின் அடிப்படையில் செயற்பட்டு பொருளாதார வளங்களை வினைத்திறனாக்குதல். மற்றும் மிகச் சிறந்ததோர் சமூகத்தினை கட்டியெழுப்புதல்